ஆம் ஆத்மிக்கு ஆதரவாக மக்கள் மவுன புரட்சி செய்கிறார்கள்: ஞானி
சென்னை: ஆம் ஆத்மிக்கு ஆதரவாக மக்கள் மவுன புரட்சி செய்கிறார்கள் என்று ஆலந்தூர் சட்டசபை வேட்பாளர் ஞானி தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுடன் ஆலந்தூர் சட்டசபை இடைத்தேர்தலும் நடக்கிறது. இதில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மூத்த பத்திரிகையாளர் ஞானி போட்டியிடுகிறார். அவர் தனது வாக்கை பதிவு செய்த பிறகு அளித்த பேட்டி: ஆம் ஆத்மி கட்சிக்கும் ஆதரவு அலை உள்ளது, ஆனால் அது மவுன அலை.
பிற கட்சியினரைப்போல ஆர்ப்பரிக்கும் அலை இது கிடையாது. எங்களுக்கு ஆர்ப்பரிப்பதில் விருப்பமும் கிடையாது. மக்கள் வெளியில் தெரியாமலே எங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்கள். ஒரு மவுன புரட்சியே ஆம் ஆத்மிக்கு ஆதரவாக நடைபெற்று வருகிறது.
தேர்தலில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சிறிய அளவு அதிகாரங்களே எஞ்சியுள்ளன. அந்த அதிகாரத்தில் ஒன்றுதான் 144 தடையுத்தரவு. கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதே என்று வருத்தப்படாமல் நாம் நேர்மையாக இருப்பதற்காக அந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்பதை உணர வேண்டும்.
பணம் கொடுப்பதும், அதை பெற்றுக் கொண்டு வாக்களிக்கவும் நமது மக்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். மக்கள் தாங்களாக முன்வந்து திருந்தினால் இதுபோன்ற தடையுத்தரவுகளுக்கும் அவசியம் இருக்காது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications