மொபைல்போன் சிக்னலுக்காக கத்திப்பாரா பாலத்தில் சாரை சாரையாக குவிந்த மக்கள்..
சென்னை: சென்னையில் மொபைல்போன் நெட்வொர்க் பல பகுதிகளில் செயலிழந்து போன நிலையில் மொபைல்போன் சிக்னலுக்காக பலர் கத்திப்பாரா மேம்பாலத்தில் குவிந்தனர்.
சென்னையை புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. குடிநீர், மின்சாரம், உணவுப் பொருட்கள் போன்ற அடிப்படைத் தேவைகள் அனைத்தும் கிடைக்காமல் மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.

இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மொபைல்போன் டவர்கள் செயலிழந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்கள் மொபைல்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதுடன், சிக்னல் கிடைக்காமலும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால், அவசரத்திற்கு கூட அழைப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும், வெளியூரில் உள்ளவர்கள், தங்களின் உறவினர் பற்றிய நிலை தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை கிண்டியிலுள்ள கத்திப்பாரா பாலத்தில் மொபைல்போன் சிக்னல் கிடைப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து, அங்கு பலர் மொபைல்போனில் பேசுவதற்காக குவிந்தனர். பலர் வாகனங்களில் வந்து சாலையோரம் நின்றுகொண்டு உறவினர்களிடம் பேசினர்.
வெளியூர்களில் உள்ள சொந்த பந்தங்களிடமும் தங்களது நிலையை எடுத்துக் கூறி மகிழ்ச்சியும், ஆறுதலும் அடைந்ததை காண முடிந்தது. ஆனால், சிக்னல் விட்டு விட்டு கிடைப்பதாக பலர் ஏமாற்றத்துடன் நின்றதையும் பார்க்க முடிந்தது.
இந்த நிலையில், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மொபைல்போன் நெட்வொர்க் மீண்டும் செயல்பட துவங்கியிருக்கிறது. இதையடுத்து, தற்போது நேரடியாக பலர் உறவினர்களை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். விரைவில் மொபைல்போன் டவர்கள் முழுமையாக செயல்பட துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications