குற்றாலத்திற்கு ஆபத்து: ராம்கோ சிமெண்ட் நிறுவனத்திற்கு எதிராக பொது மக்கள் இன்று போராட்டம்
நெல்லை: சுரண்டை-செங்கோட்டை மெயின்ரோடு மங்கம்மா சாலை அருகே ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று போராட்டம் நடத்துகிறார்கள்.
தென்காசிப் பகுதிகளில் இதுவரை வீசி வந்த தென்றல் காற்றுக்கு ஆபத்து வந்துள்ளதாம். மாறாக நச்சுக் காற்று தான் வீசப்போவதாக சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் சுரண்டை- செங்கோட்டை மெயின்ரோடு மங்கம்மா சாலை அருகே ராம்கோ சிமெண்ட் நிறுவனம், தனது சிமெண்ட் தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டு அதற்கான பூர்வாங்கப் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் தூசுகள் மற்றும் ரசாயனக் கலவைகள் காற்றின் மூலமாக விவசாய நிலங்களில் படிந்து பயிர் விளைச்சலை பாதிக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர். இதுமட்டுமின்றி குற்றால மலைக்கு இது பெரும் கேடு விளைவிக்கும் என சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது தவிர சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் தூய்மையற்ற காற்றை பொது மக்கள் சுவாசிப்பதினால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும்.
இதனால் ராம்கோ சிமெண்ட் ஆலைக்கு எதிராக ஆய்க்குடி, சிவராமபேட்டை, கொடிக்குறிச்சி, தேசிய நகர் கிராம மக்கள் இன்று போராட்டம் நடத்தவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications