வெள்ள பாதிப்புகளில் இருந்து போர்க்கால அடிப்படையில் மக்கள் மீட்பு - தமிழக அரசு
சென்னை: சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கிய மக்கள் போர்க்கால அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிவாரணப் பணிகளும் விரைவாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் 22 சுரங்கப்பாதைகளில் தேங்கியிருந்த மழை நீர் அகற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், சென்னை அம்பத்தூர் பகுதியில் 75 ஆயிரம் பேருக்கு அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டதுடன், 7 படகுகள், 20 பம்பு செட்டுகள், 6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போல வெள்ளத்தில் மூழ்கிய வேளச்சேரி ராம் நகர், துரைப்பாக்கம் தலைமை செயலகம் காலனி, ஈஞ்சம்பாக்கம், காரைப்பாக்கம் மற்றும் நீலாங்கரை ஆகிய பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 76 நடமாடும் மருத்துவக்குழு மூலம் 5 ஆயிரத்து 366 பேர் சிகிச்சை பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்து.












Click it and Unblock the Notifications