பரவி வரும் டெங்கு காய்ச்சல்- தடுக்கும் பணிக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்!

இதுகுறித்த அறிக்கையில், "மணப்பாறை நகராட்சிப் பகுதியில் உள்ள 27 வார்டுகளில் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றனது.
மாவட்ட மருத்துவத்துறை துணை இயக்குனர் ரவீந்திரன் அறிவுரைப்படி 15 தற்காலிக பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவர்கள் மூலம் நல்ல தண்ணீரில் அபேட் என்ற மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் வீடுகளை சுற்றிலும் பழைய உடைந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், தேங்காய் ஓடு, உடைந்த பானைகள், பிளாஸ்டிக் கப்புகள் கண்டறியப்பட்டு தினந்தோறும் அகற்றப்பட்டு வருகிறது.
காய்ச்சல் தொடர்பான விபரங்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேகரிக்கப்பட்டு அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைந்து விழிப்புணர்வு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் தோறும் காலை, மாலை இருவேளையும் புகைமருந்து அடிக்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் 20 பணியாளர்களை வைத்து பணி மேற்கொள்ள கலெக்டர் ஜெயஸ்ரீ அறிவுறுத்தியதன் பேரில் 20 மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மூலம் டெங்கு கொசுபுழு அழிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் இந்த டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் மாவட்ட மலேரியா அலுவலர், துணை இயக்குனர், வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள், நகர்புற சுகாதார மையத்தின் மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும். இந்த பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications