500, 1000 நோட்டுகளை ‘தங்கமாக’ மாற்றும் மக்கள்.. ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ. 1,456 விலை உயர்வு
ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால், தங்களிடம் உள்ள பணத்தை தங்கமாக மாற்ற மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,456
சென்னை: ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால், தங்களிடம் உள்ள பணத்தை தங்கமாக மாற்ற மக்கள் முயற்சித்து வருகின்றனர். இதனால் சவரனுக்கு ரூ 1,456 வரை அதிரடியாக இன்று விலை உயர்ந்துள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் நேற்றிரவு முதல் செல்லாது என அதிரடியாக மத்திய அரசு அதிகரித்தது. இந்தப் பழைய நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுக்களைப் பெற கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
ஆனபோதும், மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நகை வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தங்கத்தில் முதலீடு...
ஏற்கனவே இந்தியர்கள் தங்கம் வாங்குவதை முதலீடாகவே கருதுகின்றனர். இதனால் இங்கு தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து வருகிறது.

பாதுகாப்பு...
இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால், மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை அதிக பாதுகாப்பாக உணருவார்கள். இதனால் தங்கள் சேமிப்பை தங்கமாக வைத்திருக்க மக்கள் விரும்புவார்கள் என்பதால் தங்க வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கை அதிகரிக்கும்...
இது தொடர்பாக கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மெஹுல் சோக்ஸி கூறுகையில், "500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இனி மக்களுக்கு தங்கத்தின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

எதிர்காலத்தில் நன்மை...இந்த நடவடிக்கை தற்காலிகமாக பொருளாதாரத்தில் பாதிப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தினாலும், எதிர்காலத்தில் நாட்டுக்கு நன்மை கிடைக்கும். எனினும் அடுத்த சில நாள்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்கு குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இல்லாமல் மக்கள் சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.
இந்த நடவடிக்கை தற்காலிகமாக பொருளாதாரத்தில் பாதிப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தினாலும், எதிர்காலத்தில் நாட்டுக்கு நன்மை கிடைக்கும். எனினும் அடுத்த சில நாள்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்கு குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இல்லாமல் மக்கள் சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படும்" என்றார்.

நகைக்கடைகளில் கூட்டம்...
நேற்று இரவு இந்த அறிவிப்பு வெளியானது முதலே ஏடிஎம் மையங்களை முற்றுகையிட்டது போல், நகைக்கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததைக் காண முடிந்தது.

விடிய விடிய திறந்திருந்த கடைகள்...
இதனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நேற்றிரவு பெரும்பாலான நகைக்கடைகள் திறந்திருந்தன. மக்கள் தங்களிடமிருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை தங்கமாக மாற்றுவதில் மும்முரமாக செயல்பட்டனர். மேலும், வங்கிக் கணக்கில் இருந்த பணத்தையும் தங்கமாக மாற்றுவதில் அவர்கள் ஆர்வம் செலுத்தினர்.

விலை உயர்ந்தது...
மக்களின் இந்த ஆர்வத்தால் தங்க ஆபரணங்களின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 1,456 இன்று உயர்ந்துள்ளது. இந்த விலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீட்டில் சுபகாரியங்கள் வைத்துள்ள நடுத்தர குடும்பத்தினர் பெரும் கவலைக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications