ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொது மக்கள் சாலை மறியல்.. ஜோலார் பேட்டையில் போக்குவரத்து பாதிப்பு
ஜோலார்பேட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர்: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி ஜோலார்பேட்டையில் பொது மக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்: பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஜோலார்பேட்டையில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளை மறுதினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்தநிலையில், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் ஜல்லிகட்டு நடத்த அனுமதி வழங்க கோரி ஜல்லிகட்டு ஆதரவு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications