பேரறிவாளன் பரோல் காலம் மேலும் 1 மாதம் நீடிப்பு.. அரசாரணை வெளியிட்டது தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேரறிவாளன் பரோல் காலத்தை மேலும் 1 மாதம் நீடித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற பேரறிவாளனின் உடல்நிலை சரியில்லை. இதேபோல் அவரது தந்தையின் உடல்நலமும் சரியில்லாததால் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாய் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

Perarivalan's parole has been extended to one more month

இதனை ஏற்ற தமிழக அரசு பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி பரோல் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் வேலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

நாளையுடன் அவரது பரோல் காலம் முடிவடைய உள்ளது. பேரறிவாளனின்தா தந்தைக்கு மேலும் இரு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளவுள்ளதால் அவரது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து வழங்க தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார்.

அதன்படி பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக அரசாரணை வெளியாகவில்லை.

ஆனால், பேரறிவாளனின் பரோலை மேலும் 1 மாதத்திற்கு நீட்டித்து தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 24ம் தேதிவரை பரோல் நீடிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+