காலையில் ஒரு பேச்சு... மாலையில் ஒரு பேச்சு... கதிர்காமு எம்.எல்.ஏ : வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: தினகரன் வழங்கிய மருத்துவர் அணி இணைச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்வதாக பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமு கூறியுள்ளது அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

டிடிவி தினகரன் கடந்த 4ஆம் தேதி புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். அதில் பெரியகுளம் எம்.எல்.ஏவுக்கு மருத்துவர் அணி இணைச் செயலாளர் பதவி வழங்கினார். ஆனால் கதிர்காமு எம்.எல்.ஏ அந்த பதவி எனக்கு வேண்டாம். எம்.எல்.ஏ ஆகவே இருந்துகொள்கிறேன் என்று காலையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

Periyakulam MLA Kathirkamu is confused in his stand

மேலும், 'சொந்தக் காரணங்களுக்காக அந்தப் பதவி வேண்டாம் என்கிறேன். மூன்று அணிகளாகப் பிரிந்துள்ள அதிமுக ஒன்றிணைந்து பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

Gaur enters reisdential area in Periyakulam

இந்நிலையில், காலையில் சொன்னதற்கு மறுப்பு தெரிவித்து மருத்துவர் அணி இணைச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார். காலையில் பதவி வேண்டாம் என மறுத்துவிட்டு மாலையிலேயே அப்பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என கதிர்காமு எம்.எல்.ஏ அந்தர்பல்டியடித்துள்ளது அதிமுக தொண்டர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Periyakulam MLA Kathirkamu denied Dinakaran's new post in Admk and now he accepted the post. This made Admk carders in turmoil.
Please Wait while comments are loading...