“புத்தகங்களின் முழு பட்டியல் எங்கே? ஆர்டர் செய்யப்பட்ட தேதி என்ன?” தவெக அரசிடம் கேட்கும் திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதலில் யார் ஆட்சியில் முறைகேடு நடந்துள்ளது என திமுக - அதிமுக இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. புத்தகக் கொள்முதல் ஆர்டர் வழங்கப்பட்ட தேதி என்ன? புத்தகங்கள் பெறப்பட்ட தேதி, பணம் செலுத்தப்பட்ட தேதி என்ன? என திமுக ஐடி விங் தவெக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த திமுக ஆட்சியின் போது போது கோவை காந்திபுரத்தில், ரூ.300 கோடி செலவில், பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் பிரமாண்ட நுாலகம் கட்டும் பணி துவங்கியது. தவெக ஆட்சிக்கு வந்த பின், பணிகள் முடிந்தன. கடந்த மாதம் 16 ஆம் தேதி, முதல்வர் விஜய், பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார். இந்த நூலகத்துக்கு நுால்கள் வாங்கியிருப்பதில் பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

Periyar Arivulagam Book Row DMK Seeks Procurement and Payment Details From TVK Government

போலியான பெயர்களில், அரைவேக்காடான அல்லது முழுக்க முழுக்க தவறான தகவல்களுடன் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. 300 ரூபாய் கூட மதிப்பில்லாத புத்தகங்களை 1500 ரூபாய் விலை வைத்து விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. போலி நூல்களை விநியோகித்துக் கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர் யார்? இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த முறைகேடு திமுக ஆட்சியில் நடைபெற்றது என தவெக தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. முதல்வர் விஜய், திமுக கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் திமுக உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், தவெக ஆட்சிக்கு வந்தபிறகுதான், குறிப்பிட்ட நூல்கள் நூலகத்துக்கு வாங்கப்பட்டுள்ளன என்றும், அகல் விளக்கு பதிப்பக புத்தகத்தில் புத்தகம் நூலகத்திற்கு வந்த தேதி ஜூன் 22 என இருப்பதாகவும், முழுமையாக விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், புத்தக ஆர்வலர்களும் நெட்டிசன்களும் கேட்கும் இந்த கேள்விகளுக்கு நேர்மையான பதில் உள்ளதா தவெக கட்சியின் emcee?

பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதன் முழுமையான விவரங்களை வெளியிட வேண்டிய பொறுப்பு தற்போதைய அரசுக்கு இருக்கிறது.

கேள்விகள்:
🔹 31.05.2026 - பெரியார் அறிவுலகத்தின் இறுதிக்கட்டப் பணிகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு செய்துள்ளார்.

🔹 07.06.2026 - இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறுவதாக அமைச்சர் சம்பத் பேட்டி அளித்துள்ளார்.

🔹 22.06.2026 - அகல்விளக்கு பதிப்பகத்தின் சில புத்தகங்களில் பெரியார் அறிவுலகத்தின் முத்திரைத் தேதி.

🔹 20.07.2026 - புத்தகங்கள் அடுக்கும் பணி நடைபெறுவதாக செய்தி வெளிவந்துள்ளது.

🔹 22.08.2026 - 80 ஆயிரம் புத்தகங்கள் கொண்டுவரப்பட்டுத் தயார்நிலையில் இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.

இந்தத் தேதிகள் பல முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. தவெக கட்சியின் emcee ராஜ்மோகன் அவர்களே,

1. புத்தகக் கொள்முதல் ஆர்டர் வழங்கப்பட்ட தேதி என்ன?

2. தேர்வுக்குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுப் பட்டியல் எங்கே?

3. பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள்தான் கொள்முதல் செய்யப்பட்டனவா?

4. அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகப் புத்தகங்கள் மட்டும் ஜூன் மாத முத்திரையுடன் இருப்பதற்கான காரணம் என்ன?

5. புத்தகங்கள் பெறப்பட்ட தேதி, ஆய்வு செய்யப்பட்ட தேதி, பணம் செலுத்தப்பட்ட தேதி என்ன?

6. ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் வழங்கப்பட்ட தொகை மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை விவரங்களை ஏன் வெளியிடக்கூடாது?

திமுக ஆட்சியில் கொள்முதல் முடிந்துவிட்டது என்றால், தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு புத்தகங்களைப் பெற்றது, முத்திரையிட்டது, ஆய்வு செய்தது யார்? முறைகேடு இருந்ததாகச் சந்தேகம் எழுந்திருந்தால், அதை ஏன் உரிய முறையில் விசாரிக்கவில்லை?

குற்றச்சாட்டை முந்தைய ஆட்சியின் மீது சுமத்துவதற்கு முன், தற்போதைய அரசு தனது நிர்வாகக் காலத்தில் நடந்த ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கணக்குக் காட்ட வேண்டும்.

முழுமையான கொள்முதல் ஆவணங்கள்தான் உண்மையைத் தெளிவுபடுத்தும்!

கொள்முதல் ஆணை முதல் கடைசிப் பணப் பரிவர்த்தனை வரை, அனைத்தையும் தேதிவாரியாகப் பொதுவெளியில் வெளியிடத் தயாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+