இனிமேல் பல் இல்லாத புலி தான் டிரம்ப்.. அதிபர் பதவியில் இருந்தாலும் இஷ்டத்திற்கு ஆட முடியாது!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க மிட் டேரம் தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு அரசியல் ரீதியாக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஜனநாயக கட்சி கைப்பற்றியிருப்பதால், டிரம்ப்பிற்கு அடுத்த இரு ஆண்டுகள் சிக்கல் தான். அமெரிக்க அரசியலில் 'Lame Duck President' என்று அழைக்கப்படும் நிலைக்கு டிரம்ப் தள்ளப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் நடந்த முடிந்த மிட் டேர்ம் தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டிரம்ப் கட்சி தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. டிரம்ப் தான் அதிபர் என்றாலும் நாடாளுமன்றத்தில் அவரது கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.

Trump Becomes a Lame Duck President US Midterm Elections Trump Becomes a Lame Duck President

பின்னடைவு

இதை தான் அமெரிக்க அரசியலில் 'Lame Duck President' என்பார்கள். அதாவது பதவியில் தொடர்ந்து இருந்தாலும், முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் குறைந்துவிடும். கடந்த 10 ஆண்டுகளாக குடியரசு கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த டிரம்புக்கு, இந்த தேர்தல் முடிவு மிக பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இருப்பினும், தனது செல்வாக்கை விட்டுக்கொடுக்க டிரம்ப் தயாராக இல்லை என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்து என்ன நடக்கும்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்துள்ளதால் டிரம்ப் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து இனிமேல் ஜனநாயக கட்சியால் விசாரணை நடத்த முடியும். குறிப்பாக அதிபர் மற்றும் அவருக்கு நெருக்கமான அதிகாரிகள் தொடர்பான விவகாரங்களில் விசாரணை நடத்தலாம். முக்கிய ஆவணங்களை கேட்டு பெற முடியும். இனி வரும் காலங்களில் டிரம்பின் ஒவ்வொரு முடிவும் இதுபோல விசாரிக்கப்படும் என தெரிகிறது.

டிரம்ப் ஏற்கெனவே தனது முதல் ஆட்சி காலத்தில் இரண்டு முறை பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொண்டவர். இருப்பினும், அந்த முறை தப்பித்துக் கொண்டார். இந்த முறையும் நிச்சயம் டிரம்ப் மீது பதவி நீக்க நடவடிக்கையை ஜனநாயக கட்சி கொண்டு வரும் என்றே தெரிகிறது. இதை எதிர்பார்த்தோ என்னவோ வெள்ளை மாளிகை சட்ட ஆலோசகர் அலுவலகம் கூடுதல் வழக்கறிஞர்களை இப்போது நியமித்துள்ளது. சில அதிகாரிகள் தங்களுக்கென தனியாகவும் வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

சிக்கல் ஏன்?

பொதுவாக டிரம்ப் கொண்டு வர விரும்பும் சட்டங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், இப்போது நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதால் டிரம்ப் விரும்பும் சட்டங்களை கொண்டு வருவது கடினமாகும். ஜனநாயக கட்சி எம்பிக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே அவை நிறைவேறும்.

இதை சமாளிக்க குடியேற்றக் கொள்கை, அரசு செலவினங்கள், இறக்குமதி வரிகள் உள்ளிட்ட விவகாரங்களில் அதிபருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி முடிவுகளை எடுக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பலம் இல்லையென்றாலும் அதிபரால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது குறித்து டிரம்பின் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஈரான் போர்

அதேபோல் ஈரான் போர் விவகாரத்திலும் டிரம்ப் மீண்டும் தீவிர கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மிட் டேர்ம் தேர்தல் காரணமாக டிரம்ப் ஈரான் போர் விவகாரத்தில் பெரியளவில் ஈடுபாடு காட்டவில்லை. இப்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், புதிய தாக்குதல்கள் குறித்து முடிவு எடுக்கலாம். இருப்பினும், இந்த தேர்தலில் டிரம்ப் கட்சி இவ்வளவு பெரிய தோல்வியை சந்திக்க ஈரான் போர் தான் முக்கிய காரணமாக இருந்துள்ளது. எனவே, போர் நிறுத்தத்தை நோக்கி கூட டிரம்ப் செல்லலாம் என சொல்லப்படுகிறது.

அடுத்து யார்

இதற்கிடையே 2028 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அடுத்த முகம் யார் என்ற விவாதமும் தொடங்கியுள்ளது. அமெரிக்க விதிகளின்படி ஒரு நபரால் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவியில் இருக்க முடியும். டிரம்ப் ஏற்கனவே 2 முறை அதிபராக இருந்துவிட்டதால் அவரால் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, குடியரசு கட்சி சார்பில் யார் என்பது கேள்வியாக எழுந்துள்ளது. தற்போது துணை அதிபராக உள்ள வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. இந்த விவகாரம் குறித்து ஜனவரி மாதம் முதல் ஆலோசனை தொடங்கும் என தெரிகிறது.

பல் இல்லாத புலி

டிரம்பிற்கு பிறகு யார் என்பதெல்லாம் அடுத்த கேள்வி. ஆனால், இப்போதே டிரம்ப் அதிகாரத்தை இழந்துவிட்டார். ஒரு சில விஷயங்களை தவிர மற்ற விஷயங்களில் டிரம்ப்பால் முன்பு போல சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடியாது. சுருக்கமாக சொல்ல வேண்டும் பல் இழந்த புலியாக மாறிவிட்டார் டிரம்ப்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+