சடகோப ராமானுஜ ஜீயரை கைது செய்ய வேண்டும்... ஹைகோர்ட்டில் மனு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயரை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாமக்கல்லை சேர்ந்த வைரவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் ஜனவரி 26ல் திருச்செங்கோடு கூட்டத்தில் ஆண்டாளை விமர்சிப்பவர்கள் மீது சோடா பாட்டில் வீச தெரியும் என்று ஜீயர் பேசியிருந்தார்.

Petition filed against Sadagoppa Ramanuja Jiyar at Madras HC

கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய ஜீயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வைரவேல் தன்னுடைய மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்எஸ் ரமேஷ் வைரவேல் மனுவிற்கு பிப்ரவரி 20க்குள் சடகோப ராமானுஜ ஜீயரும், திருச்செங்கோடு காவல்துறையினரும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து ஆண்டாளை தவறாக சித்தரித்து பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜர் எங்களுக்கும் சோடா பாட்டில், கல் வீசத் தெரியும் என்று பேசி இருந்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Case filed against Srivilliputhur Sadagoppa ramanujar at Madras Highcourt to arrest him for his hatred speech at Thiruchengodu meeting .

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற