தூத்துக்குடி அண்ணாநகரில் மீண்டும் மோதல்.. போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பதற்றம்
தூத்துக்குடி அண்ணாநகரில் போலீசார் ரோந்து சென்ற போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

தூத்துக்குடி: அண்ணாநகரில் ரோந்து சென்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக இன்றும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நேற்று நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 17 வயதான 10ஆம் வகுப்பு மாணவி உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறையில் ஏராளமான வாகனங்கள் மற்றும் ஸ்டெர்லைட் ஊழியர்களின் குடியிருப்புகள் தீக்கிரையாயின.

போலீஸ் தடியடி
இதைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்கமறுத்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் துப்பாக்கிச்சூடு தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர்.

துப்பாக்கிச்சூடு
இதையடுத்து தூத்துக்குடி அண்ணாநகர் ஏழாவது தெருவில் இன்று பிற்பகல் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இளைஞர் பலி
இதில் காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் பலியானார். 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் குண்டுவீச்சு
இந்நிலையில் அண்ணாநகர் 6வது தெருவில் தற்போது மீண்டும் மோதல் வெடித்தள்ளது. ரோந்து சென்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது.

அண்ணாநகரில் பதற்றம்
இதனால் அந்த தெரு முழுவதும் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் சிதறிக்கிடக்கிறது. மீண்டும் ஆங்காங்கே பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் அண்ணாநகரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications