விழுப்புரத்தில் வீடு மாறி வீசிய பெட்ரோல் குண்டு - போலீஸ் விசாரணை
விழுப்புரத்தில் முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்: விழுப்புரத்தில் முன் விரோதத்தினால் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசுவதற்கு பதில் பக்கத்தில் வசிக்கும் ஒப்பந்தகாரர் வீட்டில் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருபவர் பிரகாஷ். இவரது பங்கிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் விழுப்புரத்தை சேர்ந்த ரவுடி இருசப்பன் பெயரில் இருவர் பிரகாஷிடம் பணம் பறிக்க முயன்றுள்ளனர்.

இது குறித்து பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு பிரகாஷின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒப்பந்தகாரர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது அங்குள்ள சிசிடிவி பதிவுகளை சோதனை செய்த போது பிரகாஷின் வீட்டிற்கு பதில் பக்கத்து வீட்டிற்குள் பெட்ரோல் குண்டை மர்மநபர்கள் வீசி சென்றது தெரியவந்தது.
பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications