பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: சென்னையில் 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 85.31
Recommended Video

சென்னை: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 85க்கு விற்பனை ஆவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்படுகிறது.

இந்த காரணத்தால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. இன்று சென்னையில் பெட்ரோலின் விலை 16 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ. 85. 31க்கு விற்கப்படுகிறது.
டீசலின் விலை 6 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ. 78க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பதிலேயே மும்பையில் தான் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 89.44க்கும், டீசல் ரூ. 78.33க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதையடுத்து சென்னையில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதை பார்த்து வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications