அக்.6ல் பாப்புலர் ஃபிரண்ட் சிறை நிரப்பும் போராட்டம்
சென்னை: குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கை கண்டித்து அக்டோபர் 6 ந் தேதி சென்னையிலும், மதுரையிலும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தப் போவதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த போராட்டம் குறித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழக மாநில தலைவர் இஸ்மாயில் கூறுகையில்,
இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் தங்களது சொந்த பிரச்சனைகளுக்காக படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், அந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையிலும், முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என மதச்சாயம் பூசி வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
தமிழக பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம். இது போன்ற கொடிய நிகழ்வுகள் அமைதிப்பூங்காவான தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல.
ஆனால், இந்த கொலையின் பின்னணி பற்றி முறையாக புலனாய்வு வெளிவரும் முன்பே தலைமறைவாக இருப்பவர்கள் தான் இக் குற்றத்திற்கு காரணமாக இருப்பார்கள் என வழக்கை ஒரு திசையைநோக்கி செலுத்துவதும், தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
எங்கு குண்டு வெடித்தாலும், இந்து தலைவர்கள் படுகொலை நடந்தாலும், அதை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று, அப்பாவிகளை குற்றவாளிகளாக சித்தரித்து பொய் வழக்குகளில் கைது செய்கின்றனர்.
இதைக் கண்டித்து அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் சிறை நிரப்பும் போராட்டம் அக்டோபர் 6-ந் தேதி நடைபெறும். சென்னை மற்றும் மதுரையில் இப்போராட்டம் நடைபெறும் என்றார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications