For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாரும் தள்ளி விட்டு சாகவில்லை ஜெயலலிதா... திண்டுக்கல் சீனிவாசன்

யாரும் தள்ளி விட்டு ஜெயலலிதா மரணமடையவில்லை என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியனும் அவரது மகன் மனோஜ் பாண்டியனும் தவறான தகவலை பரப்புகின்றனர் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். யாரும் தள்ளி விட்டு ஜெயலலிதா மரணமடையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சபாநாயகர் பி எச் பாண்டியன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும், அவரது மரணம் பற்றியும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

PH Pandian spreads rumour on Jaya's death, sayd Dindigul Srinivasan

போயஸ் இல்லத்தில் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டு, காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதை தாம் கூறவில்லை என்றும், அப்பல்லோ மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை தான் தாம் இப்போது வெளி உலகிற்கு சொல்வதாகவும் தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையை நிறுத்த சொன்னது யார் என கேட்ட அவர், அப்பல்லோ மருத்துவமனையின் சிகிச்சை அறிக்கையை ஆதாரமாக காட்டி பல சந்தேகங்களை எழுப்பினார். ஜெயலலிதா வீடு மற்றும் மருத்துவமனை நுழைவாயில் சிசிடிவி கேமரா பதிவுகளை வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை தாங்கள் நெருங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

பிஎச் பாண்டியன் குற்றச்சாட்டுக்கு வனத்துறை அமைச்சரும் அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்துள்ளார். ஜெயலலிதா மரணத்தை அரசியலுக்காக விமர்சிப்பது மனிதாபிமானத்திற்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளார்.

யாரும் தள்ளிவிட்டு ஜெயலலிதா மரணமடையவில்லை என்று கூறிய அவர், பிஎச் பாண்டியனும், அவரது மகன் மனோஜ் பாண்டியனும் தவறான தகவலை பரப்புவதாக கூறினார்.

English summary
TN MInister Dindigul Srinivasan has said that Jayalalitha did not die of injuries by fall in her Poes Garden house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X