For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட் விலக்கு... நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் கூறினார்- ஓபிஎஸ் : வீடியோ

நீட் உள்ளிட்ட பிரச்சனைகளை குறித்துக் கூறிய போது நடவடிக்கை எடுக்கிறேன் என பிரதமர் கூறியதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

By Suganthi
Google Oneindia Tamil News

மதுரை: நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பிரதமரிடம் பேசினேன். நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறினார்.

நேற்று ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் நினைவு மணிமண்டபத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அவரை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்.

அப்போது பிரதமரிடம் தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிப்பது தொடர்பாகப் பேசியதாக ஓ.பன்னீசெல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்துப் பேசியதாகவும் பிரதமர் மோடி அதற்கு நடவடிக்கை எடுப்பதாக பதில் அளித்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

நீட் தேர்வு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் மாணவர்கள் இந்த கல்வியாண்டில் இன்னமும் கல்லூரியில் சேராமல் உள்ளனர் என்ற நிலையில் நீட் தேர்வில் விலக்கு அளிப்பது குறித்து மத்திய அர்தசு தீர்க்கமான முடிவு எடுக்காமல் மாணவர்களைத் துன்பப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
In Madurai airport Ex. cm OPS met prime minister Modi and OPS told after meeting pm Modi that PM answered that he will take action on NEET exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X