தேமுதிகவுக்கு சேலமா?... பாமக கொந்தளிப்பு.. டீ மாஸ்டர் தீக்குளிக்க முயற்சி!
சேலம்: சேலம் நாடாளுமன்றத் தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் பாமகவினர் கடும் கொதிப்படைந்துள்ளனர். சேலத்தில் போராட்டம் வெடித்துள்ளது. பாமகவைச் சேர்ந்த டீ மாஸ்டர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு கூடியுள்ளது.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக, பாமகவுக்கு தொகுதிகளை ஒதுக்குவதற்குள் செத்துச் சுண்ணாம்பாகி விட்டது பாஜக. ஒரு வழியாக கடுமையாக போராடி இரு கட்சிகளுக்குமான தொகுதிகளை அது தீர்மானித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சேலம் தொகுதியை தேமுதிகவுக்கு பாஜக ஒதுக்கியுள்ளதாக வந்த செய்தியைத் தொடர்ந்து சேலத்தில் பாமகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஏற்கனவே பாமக அறிவித்து பிரசார வேலையையும் தொடங்கிய தொகுதிகளில் ஒன்றுதான் சேலம். அங்கு தனது வேட்பாளராக அருளை நிறுத்தியுள்ளது பாமக. அவரும் தீவிரமாக வேலை பார்த்து வந்தார். கிராமம் கிராமமாக சென்றும் ஆதரவு திரட்டி வந்தார்.
இந்த நிலையில் சேலத்தை தேமுதிகவுக்கு ஒதுக்கி விட்டதாக வந்த செய்தி பாமகவினரை அதிரச் செய்துள்ளது.
இன்று காலை சேலம் கனரம்பட்டியை சேர்ந்த பா.ம.க நிர்வாகியான கார்த்தி என்பவர், சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு வந்தார்.
திடீரென்று உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். பாரதீய ஜனதா கூட்டணியில் சேலம் தொகுதியை பா.ம.க.வுக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்றும், வேட்பாளர் அருள் தான் போட்டியிட வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினார்.
அப்போது ரோந்து வந்த போலீஸ் உதவி கமிஷனர் ராஜேந்திரன், செவ்வாய்ப்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அந்த வாலிபரை தடுத்து அவரது உடலில் தண்ணீரை ஊற்றி தீக்குளிக்க விடாமல் தடுத்துவிட்டனர்.
பின்னர் அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவர் டீக்கடை மாஸ்டராக இருக்கிறார். கருங்கல்பட்டியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். பாமக சேலம் தெற்கு தொகுதி இளைஞர் சங்க துணைச் செயலாளராகவும் இருக்கிறார்.
கார்த்தி தீக்குளிக்க முயன்ற தகவலை அறிந்த பாமகவைச் சேர்ந்த சிலர் கூடி நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு திரண்டனர். ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications