உள்ளாட்சித் தேர்தலுக்கு பாமகவும் தயார்…. போட்டியிட விருப்பம் இருந்தால் மனு தரலாம்!
சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கான விரும்ப மனுக்களை வரும் 21ம் தேதியிலிருந்து கொடுக்கலாம் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கிராம ஊராட்சி உறுப்பினர் பதவி முதல் மாநகராட்சி உறுப்பினர் பதவி வரை மொத்தம் 1,32,058 பதவியிடங்களுக்கு அடுத்த மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள பாமகவும் தயாராக இருக்கிறது.

எனவே, தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் வரும் 21ம் தேதி புதன்கிழமை முதல் 25ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வரை மொத்தம் 5 நாட்களுக்கு விருப்பமனுக்கள் பெறப்படவுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் வரும் புதன்கிழமை முதல் இம்மனுக்களை பெறுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜி.கே மணி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications