For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.கே நகர் இடைத்தேர்தலை ராதா பாட்டி, சீதா பாட்டி கதை சொல்லி கலாய்த்த ராமதாஸ்!

ஆர்.கே நகர் இடைத்தேர்தலை ராதா பாட்டி, சீதா பாட்டி கதை சொல்லி கலாய்த்த ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்ததாக கூறப்பட்டுள்ள புகார் குறித்தும், தேர்தல் நடைபெறும் விதம் குறித்தும் பா.ம.க தலைவர் ராமதாஸ் ட்விட்டரில் கலாய்த்து உள்ளார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பணப்பட்டுவாடா, தேர்தல் விதிமீறல் புகார்கள் எழுந்துள்ள நிலையில் நடக்கும் இந்த தேர்தல் குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ராதா பாட்டி, சீதா பாட்டி கதை மூலம் ட்விட்டரில் நையாண்டி செய்து இருக்கிறார்.

 PMK Founder Mocking RK Nagar Election style in Twitter

கடந்த ஏப்ரல் மாதமே நடைபெற வேண்டி இருந்த ஆர்.கே நகர் தேர்தல் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் ஆர்.கே நகர் தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா அதிகம் இருக்கும், நேர்மையான முறையில் தேர்தல் நடக்காது என்று கூறி பா.மா.க ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடாது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்த ட்வீட்டில் ராதா, சீதா என இரண்டு பாட்டிகள் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து பேசிக்கொள்ளுவது போலவும், தங்களுக்கு இப்படி இடைத்த்தேர்தல் வராது என்று அங்கலாய்த்து கொள்வது போலவும் நக்கலாக பதிவிட்டு உள்ளார்.

அதே போல, இன்றைய ட்விட்டர் பதிவிலும் வாக்குப்பதிவும் பணப்பட்டுவாடா போல விறுவிறுப்பாக நடைபெறுவதாகவும், இப்படியும் தேர்தல் நடத்தலாமா என்று வெளிநாட்டில் இருந்து எல்லாம் பார்வையாளர்கள் வந்து பார்வையிடுவதாகவும் ராதா மற்றும் சீதா பாட்டி பேசிக்கொள்வது போல ராமதாஸ் பதிவிட்டு உள்ளார்.

English summary
PMK Founder Mocking RK Nagar Election style in Twitter. He made Sarcasm on Bribing to voters .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X