நெல்லித்தோப்பு இடைத்தேர்தலை புறக்கணித்தது பாமக! விடுதலை சிறுத்தைகள் முடிவு காரணமா?
புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக பாமக அறிவித்துள்ளது.
வரும் நவம்பர் 19ம் தேதி நடக்கவுள்ள நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் புதுவையின் முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். புதுவையில் உள்ள பல கட்சிகளிடமிருந்தும் முதல்வர் நாராயணசாமிக்கு ஆதரவை பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி முயற்சியில் ஈடுபட்டது.

இந்நிலையில், நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து, நாராயணசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு அளிக்கும் கடிதத்தை வழங்கினார்கள்.
இந்நிலையில், நெல்லித்தோப்பு இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக இன்று பாமக அறிவித்துள்ளது. தேர்தல் நியாயமாக நடைபெறாது என்பதால் போட்டியிடவில்லை என அக்கட்சி தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இதனிடையே, நெல்லித்தோப்பு தொகுதியில் யாருக்கும் ஆதரவு இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. ஆளும் கட்சி எளிதாக இடைத் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். அப்படி வெற்றி பெற்றால், ஒருவகையில், விடுதலை சிறுத்தைகளிடம் பாமக தோற்றதை போலாகிவிடும் என்பதால் பாமக போட்டியிடவில்லை என கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications