"அம்மா" இருந்திருந்தால் இந்த கூத்து எல்லாம் போயஸ் கார்டனில் நடக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெ. தீபா வருகையால் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தின் முன்பு இன்று பரபரப்பு நிலவுகிறது.

போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டிற்கு வந்துள்ளார் அவரின் அண்ணன் மகள் தீபா. எங்கள் அத்தையின் பேனா மட்டும் போதும் என்று கூறிய தீபா இன்று வேதா இல்லத்திற்கு சொந்தம் கொண்டாடுகிறார்.

தீபாவை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர்.

தீபா

தீபா

தீபா தனது ஆதரவாளர்களுடன் வந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீபாவும், அவரது ஆதரவாளர்களும் வீட்டிற்குள் செல்ல அனுமதி கோரி வாக்குவாதம் செய்கிறார்கள்.

வேதா இல்லம்

வேதா இல்லம்

வேதா இல்லம் இருக்கும் இடம் பரபரப்பாக காணப்படுகிறது. அத்தை ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த தனது சகோதரர் தீபக் அழைத்ததால் வந்ததாக தீபா தெரிவித்துள்ளார்.

விவேக்

விவேக்

வேதா இல்லத்தில் இளவரசியின் மகன் விவேக் வசித்து வருகிறார். வேதா இல்லத்தில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்பதாக அங்கு வேலை பார்த்தவர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேய் வீடு

பேய் வீடு

ஜெயலலிதா இருந்த வரை கம்பீரமாக இருந்த வேதா இல்லம் இன்று பேய் வீடு என்ற பெயர் எடுத்துள்ளது. இந்நிலையில் இன்று தீபாவோ வேதா இல்லம் தனக்கும், தனது கணவர் மாதவனுக்கும் சொந்தம் என்று புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Poes Garden look tense on sunday after Jayalalithaa's niece Deepa tried to enter Vedha Illam saying that she is the rightful heir to the house.
Please Wait while comments are loading...