கமலை காதலராக பார்த்தோம்... இனி தலைவராக பார்ப்போம்... கவிஞர் சினேகன்
கமலை காதலராக பார்த்த நாங்கள் இனி தலைவராக பார்ப்போம் என்று கவிஞர் சினேகன் தெரிவித்தார்.
Recommended Video

ராமேஸ்வரம்: கமலை இது வரை நாங்கள் காதலராகத்தான் பார்த்து வந்தோம். ஆனால் இனி அவரை தலைவராக பார்ப்போம் என்று நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கவிஞர் சினேகன் தெரிவித்தார்.
கமல்ஹாசன் இன்று கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் கலாமின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
கமலின் அரசியல் பிரவேசத்தில் இணைந்துள்ள கவிஞர் சினேகன் கூறுகையில், இந்த நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். ஒட்டுமொத்த உலகத் தமிழர்கள் எதிர்பார்த்த நாள் இது. தமிழகத்துக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்று எல்லாரும் எதிர்பார்த்து கொண்டிருந்தோம்.

கமல் இறங்கியுள்ளார்
யார் மூலமாவது நிறைய மாற்றங்கள் வராதா என்று ஏங்கியிருந்தோம். எதிர் பார்த்தவங்க வராங்களோ இல்லையோ ஆனா எதிர்பார்க்காத நேரத்தில், சரியான கட்டத்தில் தலைவர் கமல் இறங்கியுள்ளார்.

தலைவர்
இத்தனை நாளாக அவரை ஒரு காதலாரகவே பார்த்து வந்தோம். இனிதான் அவரை தலைவராக பார்க்கவுள்ளோம். ரசிகர்கள் ஆதரவு இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். அதையும் மீறி பொதுமக்களின் ஆதரவு இருந்ததுதான் எங்களை வியப்பில் ஆழ்த்திய ஒரு விஷயம்.

வேடிக்கை பார்ப்பது வேறு
மக்கள் மனதில் அத்தனை சந்தோஷம். வேடிக்கை பார்ப்பது என்பது வேறு , வியப்பாக பார்ப்பது என்பது வேறு. சந்தோஷமாக பார்ப்பது வேறு, அந்த தருணம் இன்று ராமேஸ்வரத்தில் நாங்கள் பார்த்தோம்.

பள்ளியில் தடை
கலாம் வீட்டுக்கு சென்று அங்கு காலை சிற்றுண்டியை முடித்து கொண்டு அவரது பள்ளிக்கு சென்றார் கமல். அங்கு அனுமதி கிடைக்காவிட்டாலும், கட்டி தழுவ முடியாவிட்டாலும் காலடியில் ஆசி வாங்குவது போல் வெளியே நின்று கும்பிட்டார்.

முதல் தொடக்கம்
எந்த வித கலாட்டா இல்லாமல், ஆர்ப்பரிப்பு இல்லாமல் அழகாக பயணத்தை தொடங்கியுள்ளோம். அகிம்சையிலேயே மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்குவதற்கான முதல் தொடக்கமாக இது இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications