Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனிமே நீ தாண்டி என்னோட வைஃப்.. 16 வயது சிறுமிக்கு தாலி கட்டிய 2கே கிட்! போலீசை கண்டதும் எஸ்கேப்!

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 16 வயது சிறுமிக்கு தாலி கட்டியதோடு அதனை வீடியோ எடுத்து ஸ்டேட்டஸாக வைத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். தாலி கட்டியவுடன் காதலன் எஸ்கேப்பாக சிறுமி மீட்கப்பட்டு இருக்கும் நிலையில், அவர் தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறார்.

நவீன டிஜிட்டல் யுகத்தில் உள்ளங்கையில் எல்லாமே என்பது போல், ஒரு ஒரு ஸ்மார்ட் போனிலேயே எல்லாம் வந்து விட்டது. அதிலும் இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் உள்ளிட்டவை வந்ததும் போதும் இந்த 2கே கிட்ஸ்களின் தொல்லை தாங்க முடியவில்லை என்பது போல் தான் இருக்கிறது.

POCSO crime

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட 15 வயது சிறுவன், சிறுமியும் காதலிப்பதாகவும் அவர்களுக்கு அவர்களது பெற்றோர் ஆதரவு கொடுப்பது போல வீடியோக்கள் வெளியாகின. தொடர்ந்து அந்த காதல் ஜோடி பிரிந்தது பெரிய அளவில் இணையத்தில் பேசுபொருள் ஆனது.

இந்த விவகாரத்தில் குழந்தைகள் ஆணையம் கூட விசாரித்து அந்த விவகாரத்திற்கு முடிவு கட்டியது. தற்போது கூட 15 வயது கூட நிரம்பாத சிறுவர்களும் சிறுமியர்களும் காதலிப்பது போல இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். பிறகு போலீசில் சிக்குவது, பெற்றோர்கள் மன்னிப்பு கேட்பது என்பன உள்ளிட்ட சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருவது பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அற்ப லைக்குகள் கிடைக்கும் என்ற நப்பாசையில் ஆன்லைன் யுகத்தில் இது போன்ற சில சம்பவங்கள் நடைபெறுகிறது. அதே நேரத்தில் சிறார் சிறுமியர் திருமணங்களும் தமிழகத்தில் அதிகமாக நடைபெற்று வருவதும் கவனிக்கத்தக்கது. அப்படி சிறுமி ஒருவரை கடத்திய காதலன் அவருக்கு தாலி கட்டிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட தற்போது அதனை வைத்து வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு காலணி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்திருக்கிறார். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த அவர் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. குடும்பத்துக்காக வேலைக்கு சென்ற அந்த சிறுமியை தாய் தான் பராமரித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அந்த சிறுமி அதன் பின் வீடு திரும்பவில்லை.

POCSO crime

இதை அடுத்து சிறுமியின் தாய் வாணியம்பாடி ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக
வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வந்தது. அதில் மாயமானதாக கூறப்பட்ட அந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்ற இளைஞர் தாலி கட்டும் வீடியோ இருந்தது.'

கோவிலில் காவல்துறையினர் விசாரித்த போது 22 வயதான பாலாஜி சிறுமியை அழைத்துச் சென்று காதலிப்பதாக கூறி தாலி கட்டியது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் இருவரும் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து அங்கு சென்றபோது சிறுமியை விட்டுவிட்டு தாலி கட்டிய பாலாஜி மட்டும் தப்பிவிட்டார். இதை அடுத்து சிறுமியை மீட்டு கவுன்சிலிங் கொடுத்து பெற்றோருடன் ஒப்படைத்து இருக்கின்றனர் காவல்துறையினர். மேலும் தப்பி ஓடிய பாலாஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+