3000 அடி உயரத்திலிருந்து இளைஞர் பலியான சம்பவம்.. தலைமலை கோயில் சுவற்றை சுற்ற போலீஸ் தடை
திருச்சி மாவட்டத்தில் உள்ள தலைமலை கோயிலில் ஆபத்தான வகையில் கிரிவலம் வந்த போது 3000 அடி உயரத்திலிருந்து விழுந்து இளைஞர் பலியானதை அடுத்து அந்த பகுதியில் கிரிவலம் வர போலீஸ் தடை விதித்துள்ளது.
நாமக்கல்: முசிறியில் உள்ள தலைமலை கோயிலில் சுற்றுச் சுவற்றில் கிரிவலம் வந்த இளைஞர் ஆறுமுகம் தவறி விழுந்து உயிரிழந்ததை அடுத்து அப்பகுதியில் கிரிவலம் மேற்கொள்ள போலீஸார் தடை விதித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அகண்ட காவிரியின் வடகரையில் நீர்வளம், நிலவளம் பொருந்திய தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயில் மிக பழமையும், தொன்மையும் வாய்ந்த சிறப்பு பெற்ற வைணவ கோயிலாகும். கடந்த புரட்டாசி கடைசி சனிக்கிழமை அன்று ஏராளமான பக்தர்கள் காலை முதலே கிரிவலம் வந்தனர்.

அப்போது கிரிவலம் வந்த இளைஞர் ஒருவர் 3000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார். இதுகுறித்து தகவலறிந்த எருமைப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தவறி விழுந்த இளைஞரை மீட்பதற்கு வனத்துறை, தீயணைப்புத் துறை ஆகியோரின் உதவியை போலீஸார் நாடினர்.
போலீஸ் விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் ஆறுமுகம் என்றும் திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லாததால் குழந்தை வரம் வேண்டி கிரிவலம் வந்ததும் தெரியவந்தது. அந்த இளைஞர் 600 அடி உயரத்தில் இருந்த பள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதையடுத்து ஆபத்தான அந்த கோயில் சுவற்றில் கிரிவலம் வர தடை விதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இன்னொரு உயிர் போகாத நிலையில் நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் சஞ்சீவராய பெருமாள் கோயில் சுவற்றில் கிரிவலம் செல்வது ஆபத்தானது என்றும் இது ஆபத்தான பகுதி என்றும் எருமைப்பட்டி போலீஸார் சார்பில் எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications