நெல்லை பள்ளியை கலக்கிய "மன்மத ராசாக்கள்".. அடித்து விரட்டிய போலீஸ்!
நெல்லை: நெல்லை அருகே பள்ளிகள் முனபு நின்று கொண்டு மாணவிகளை கிண்டல் செய்து நெளிய செய்த "மன்மத ராசாக்களை" போலீசார் விரட்டி அடித்ததால் அவர்கள் பயந்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏறபடுத்தியுளளது.

நெல்லை அருகே உளள திசையன்விளையில் பஸ் நிலையத்தில் இருந்து சுடலை ஆண்டவர் கோயில் வரை அரை மீட்டர் கிலோ தூரத்திற்குள் உலக மீட்பர் மேல்நிலைப்பளளி, ஸ்டெல்லா மேரீஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைபபள்ளி ஆகிய பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு காலை 8 மணியிலிருந்து 9 மணி வரையும், மாலை 4 மணியிலிருந்து 5 மணி வரையும் மாணவ, மாணவிகளால் நிரம்பி காணப்படும். இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் "மன்மத ராசாக்கள்" விலை உயர்ந்த பைக்குகளில் இரண்டு மூன்று பேராக வலம் வந்து மாணவிகளை கிண்டல் செய்து வந்தனர்.
தற்போது 10 மற்றும் பிளஸ்டூ பொது தேர்வு நடப்பதால் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இரவு நீண்ட நேரம வரை சிறப்பு வகுப்புகள் நடந்து வருகிறது.
இதனால் வகுப்பு முடிந்து திரும்பும் மாணவிகள் இநத ரோமியோக்களுக்குப் பயந்து பயந்து தான் வீடு திரும்புகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் சார்பில் எஸ்பி அலுவலகத்தில புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார் பள்ளிகள் முன்பு கொட்டம் அடித்த மன்மத ராசாக்களை "அன்பாக" விசாரித்து அனுப்பினர். இதனை பார்த்த மறற மன்மத ராசாக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த நடவடிக்கையால் ஆசிரியர்களும், மாணவிகளும் நிம்மதி அடைந்துள்ளனர். பொது தேர்வு முடியும் வரை இந்த நடவடிக்கை தேவை என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications