அப்பவே வந்திருந்தா தேடும் அவசியமே வந்திருக்காது... சிம்பு குறித்து போலீஸ் விளக்கம்
சென்னை: புகார் அளிக்கப்பட்டதும் நடிகர் சிம்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தால், தற்போது அவரைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல் ‘யூ டியூப்' மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை இழிவு படுத்தும் வகையில் உள்ள அந்தப் பாட்டிற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் வலுத்து வருகின்றன.
தி.நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டை பெண்கள் அமைப்பினரும், வேறு சில அமைப்பினரும் கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் சிம்பு, அனிருத் ஆகிய இருவரின் உருவப் படங்களை தீயிட்டு கொளுத்தி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

வழக்கு...
பாடல் விவகாரம் தொடர்பாக சிம்பு மற்றும் அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் போலீஸில் கொடுக்கப்பட்டுள்ள புகார்களின் பேரில் இரு இடங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

தலைமறைவான சிம்பு...
இசை நிகழ்ச்சிக்காக கனடா சென்ற அனிருத், இந்தியா திரும்பாமல் அங்கேயே தங்கி விட்டார். ஆனால், சிம்பு எங்கிருக்கிறார் என்றே இல்லை. தலைமறைவாக உள்ள சிம்புவைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கைது நடவடிக்கை...
இது தவிர சிம்பு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜனவரி 4-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி ஒத்திவைத்து விட்டார். இதனால், சிம்புவைக் கண்டதும் கைது செய்யும் முயற்சிகளில் போலீசார் இறங்கியுள்ளனர்.

தாயார்...
இந்நிலையில் நேற்று சிம்புவின் தாயார் பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அதில், சிம்புவின் நிலை குறித்து அவர் கண்ணீருடன் பேசி இருந்தார்.

நேரில் விளக்கம் தந்திருந்தால்...
ஆனால், இவ்வாறு நிலைமையை மேலும் சிக்கலாக்கியது சிம்பு தான் என்கின்றனர் போலீசார். வழக்குப்பதிவு செய்திருப்பது தெரிந்தவுடன் அவரே நேரில் வந்து விளக்கம் அளித்து சென்றிருந்தால் நாங்கள் தேட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என அவர்கள் கூறுகின்றனர்.

தென்தமிழகத்தில் தான்...
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிம்புவை இப்போது நாங்கள் தேடி கண்டுபிடித்தால் கைது செய்ய வேண்டிய நிலைதான் ஏற்படும். அவர் வெளிநாடுகளுக்கு இது வரை தப்பிச் செல்லவில்லை. தென் தமிழகத்தில்தான் எங்கேயோ தலைமறைவாக இருக்கிறார். அவரை பிடிக்க கூடுதல் போலீஸாரை ஈடுபடுத்த இருக்கிறோம்" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications