விநாயகர் சிலை கரைப்பதில் மோதல் - சங்கரன்கோவிலில் போலீஸ் தடியடி
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் விநாயகர் சிலையை குறிப்பிட்ட வழியில் செல்ல அனுமதிக்காததால் போலீசாருக்கும் இந்து முன்னியினருக்கும் மோதல் ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்திக்காக நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 23 இடஙகளில் விநாயகர் சிலை பிரதிஷ்சை செய்யப்பட்டிருந்தது. விநாயர் சிலைகள் அனைத்தும் நேற்று மாலை இருந்தே ஒவ்வொன்றாக சங்கரநாராயணசாமி கோவிலில் திடலுக்கு கொண்டு வரப்பட்டது.
சங்கரன்கோவிலில் 19வது வார்டுக்கு உட்பட்ட பாட்டத்தார் மற்றும் காமராஜர் நகரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை இந்து முன்ணனி நகர தலைவர் ஜீவராஜ் தலைமையில் நிர்வாகிகளும், பொதுமக்களும் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
அப்போது காந்தி நகரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை எடுப்பதற்காக அனைவரும் வந்தபோது போலீசார் விநாயகர் சிலை ஊர்வலத்தை கெளரிசங்கர் தியேட்டர் வழியாக செல்லுமாறு கூறினர். இதற்கு இந்து முன்னனி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து கழுகுமலை சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பிக்கள் மாதவன், வானுமாமலை, டவுன் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சாலையில் அமர்ந்திருந்த இந்து முன்னனி நிர்வாகிகள் 4 பேரை அடித்து இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசாரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கழுகுமலை சாலையில் திரண்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டது.
போலீசார் காந்தி நகரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை அப்புறப்படு்த்த முயன்றனர். இதனை தடுத்த பொதுமக்கள் பிடித்து சென்ற இந்து முன்னனியினரை விடுவி்த்தால் மட்டுமே சிலையை எடுக்க விடுவோம் என்று தெரிவித்து விட்டனர். இதனால் 4 பேரையும் விடுவித்தனர். இதனால் கழுகுமலை சாலையில் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications