அயனாவரம் பலாத்கார வழக்கு.. மருந்துக் கடைக்காரர்களைப் பிடித்து துருவி துருவி விசாரணை
Recommended Video

சென்னை: சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பிரசவத்தின்போது வலி குறைப்பதற்காக போடப்படும் ஊசி போடப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுமிக்கு போடப்பட்ட ஊசி மருந்தை விற்பனை செய்த மருந்து கடைக்காரர்களிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமியை 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலாத்காரத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை அயனாவரம் மகளிர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளிகள் போதை ஊசி போட்டதாக புகார் கூறப்பட்டது. ஆனால் கைதான குற்றவாளிகள் போதை ஊசியை பயன்படுத்தவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளிகள் பிரசவத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைப்பதற்காக பயன்படுத்தும் ஊசி மருந்தை செலுத்தியது தெரிய வந்தது.
சிறுமி பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு 'லிப்ட்' இயக்கும் ஊழியர் ரவிக்குமார் ஆரம்ப காலத்தில் அயனாவரம் பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் ஊழியராக வேலை செய்துள்ளார். அந்த சமயத்தில் பிரசவத்தின்போது பெண்களுக்கு வலி ஏற்படாமல் தடுப்பதற்காக போடப்படும் ஊசி மருந்து பற்றி அவர் தெரிந்து வைத்துள்ளார்.
அந்த வகையில், ரவிக்குமார்தான் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குறிப்பிட்ட ஊசி மருந்தை போட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் சிறுமிக்கு போடப்பட்ட ஊசி மருந்தை விற்பனை செய்ததாக கூறப்படும் 3 மருந்து கடைக்காரர்களிடமும் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 17 குற்றவாளிகளுக்கும் நீதிபதி முன்னிலையில் விரைவில் அடையாள அணிவகுப்பு விரைவில் நடைபெற உள்ளது. அடையாள அணிவகுப்புக்கான ஏற்பாடுகளை போலீஸார் செய்துவருகின்றனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications