போஸ்டர் அவமதிப்பால் பதற்றம்- வாலிபருக்கு சராமரி அரிவாள் வெட்டு
நெல்லை: நெல்லையில் இந்து மகா சபை சார்பில் ஒட்டபட்ட போஸ்டர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக எழுந்த மோதலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை வண்ணார்பேட்டையை சேர்நதவர் சவுந்திரபாண்டியன். இந்து மகா சபை நெல்லை மாநகர் மாவட்ட தலைமை செயலாளர். இந்த நிலையில் இந்து மகா சபை சார்பில் நெல்லையில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டது.

இதில் வளையாபதி தெருவில் ஓட்டப்பட்டிருந்த போஸ்டரை யாரோ அவமதிப்பு செய்திருந்தனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த இமானுவேல் என்பவருக்கும், சவுந்திரபாண்டிக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் இமானுவேலை சவுந்திரபாண்டியன் தாக்கியதாக கூறப்படுகிறது. இமானுவேல் உடனடியாக இந்த தகவலை போலீசாரிடம் கூறி புகார் பதிவு செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சவுந்திரபாண்டியனை கைது செய்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சவுந்திரபாண்டியன் ஆதரவாளர்கள் மாலை வளையாபதி தெருவுக்கு ஆயுதங்களுடன் திரண்டு வந்தனர். அங்கிருந்த பொதுமக்களை சராமரியாக தாக்க தொடங்கினர். இதனால் அவர்கள் பீதியில் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
அருகில் இருந்த மணி என்பவரது வீட்டுக்குள் புகுந்த அவர்கள் அங்கிருந்த அவரது மகனை அரிவாளால் சராமரியாக வெட்டினர். மேலும் பொதுமக்கள் தெருவில் நிறுத்தியிருந்த 2 ஆட்டோக்கள், 1 பைக் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டது.
பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாளை உதவி கமிஷனர் மாதவன் நாயர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications