வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்துவிடப்படாததால் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை- போலீஸ்
அலங்காநல்லூரில் காளைகளை இளைஞர்கள் அவிழ்த்து விட்டு ஜல்லிக்கட்டு நடந்ததாக கூறினார்கள். ஆனால் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்துவிடாததால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என போலீஸ் தரப்பு மறுத்துள்ளது.
அலங்காநல்லூர்: அலங்காநல்லூரில் தடையை மீறி மாற்று வழியில் காளைகளை இளைஞர்கள் அவிழ்த்துவிட்டனர். ஆனால் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்படாததால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என்று போலீசார் மறுத்துள்ளனர்.
பொங்கல் திருவிழாவின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டை நடத்த அலங்காநல்லூர் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் என ஆராவாரமாக ஒன்று கூடியுள்ளனர். ஆனால் ஜல்லிக்கட்டை நடக்கவிடாமல் தடுக்க ஆயுதம் தாங்கிய போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போலீசை ஏமாற்றிவிட்டு மாற்றுவழியில் காளைகளை இளைஞர்கள் அவிழ்த்துவிட்டனர். அப்போது, சீறிப் பாய்ந்த காளைகளை பிடிக்க இளைஞர்கள் முயற்சி செய்தனர். இதனையடுத்து, ஜல்லிக்கட்டு நடைபெற்றுவிட்டது என்று கூறி இளைஞர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியே நடத்தப்படவில்லை என போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. வாடிவாசல் வழியாக காளைகள் எதுவும் அவிழ்த்துவிடவில்லை என்றும் அதனால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை என்றும் எஸ்.பி. விஜயேந்திர பிதாரி கூறியுள்ளார். மேலும், அமைதியான முறையில் போராட்டம் நடந்தால் போலீஸ் ஒத்துழைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் போது பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால், அலங்காநல்லூரில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications