சென்னையில் நாளை 5000 போலீசார் பாதுகாப்பு.. பிரதமர் வருகையை முன்னிட்டு உச்சக்கட்ட செக்யூரிட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ராணுவ கண்காட்சியை பார்வையிட நாளை சென்னை வருகிறார் மோடி

  சென்னை: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் நாளை 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார்.

  Police security tightened in Chennai for Prime Minister Modi arrival

  நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இதனை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  பிரதமர் மோடி செல்லும் இடம் எங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் நாளை 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கமாண்டோ படை மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் முதல் அடையாறு புற்றுநோய் மையம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  ஆலந்தூர் சைதாப்பேட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை ஐஐடி மற்றும் புற்றுநோய் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Police security tightened in Chennai for Prime Minister Modi arrival. 5000 Police will be in security work tomorrow in Chennai.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற