நிக்கி கல்ராணியை பார்க்க குவிந்த ரசிகர் கூட்டம்.. போலீஸ் தடியடி.. திருப்பூரில் பரபரப்பு
Recommended Video

ஈரோடு: திருப்பூரில் செல்போன் கடை திறப்பு விழாவுக்கு வருகை தந்த நடிகை நிக்கி கல்ராணியை பார்ப்பதற்கு கூடிய கூட்டத்தால் போலீஸ் தடியடி நடத்தினர்.
திருப்பூர் குமரன் சாலையில் புதிதாக செல்போன் கடை ஒன்று நேற்று திறக்கப்பட்டது. நிக்கி கல்ராணி பங்கேற்று கடையை திறந்து வைத்தார். முன்னதாக இது தொடர்பாக மீடியாக்களில் தொடர்ந்து விளம்பரம் செய்யப்பட்டு வந்தது.
999 ரூபாய் செல்போன் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு 100 ரூபாய்க்கும், முதல் 200 வாடிக்கையாளர்களுக்கு 200 ரூபாய் விலையில் வழங்கப்படும் என்று கவர்ச்சிகர திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

கவர்ச்சி மழை
கவர்ச்சிகர திட்ட பலனுடன், கவர்ச்சி நடிகை நிக்கி கல்ராணியையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் ரசிகர்கள் கூட்டம் முற்றுகையிட்டது. நிக்கி கல்ராணி உடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதில் ரசிகர்கள் மட்டுமின்றி கடை ஊழியர்களும் ஆர்வம் காட்டினர்.

தடியடி
இதையடுத்து அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை கட்டு மீறிப் போனதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதன்பிறகு செல்போன் ஷோரூமை நிக்கி கல்ராணி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
|
கோவை
இதன் பிறகு கோவையிலும் அதே செல்போன் ஷோரூமின் மற்றொரு கிளையையும் நிக்கி கல்ராணி துவக்கி வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நடிகைகள் என்றாலே
ஏற்கனவே சேலத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகள் வருகை தந்த போது ரசிகர்கள் தள்ளுமுள்ளு காரணமாக போலீஸ் தடியடி நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications