கூவத்தூர் ரிசார்ட்டுக்குள் புகுந்த அதிரடிப்படை.. 3 மணி வரை எம்.எல்.ஏக்களுக்குக் கெடு!
கூவத்தூர் ரிசார்ட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 மணிக்குள் வெளியேற போலீஸார் இறுதிக் கெடு விதித்துள்ளனர்.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை தெற்குத் தொகுதி எம்எல்ஏ சரவணன் புகார் அளித்தைத் தொடர்ந்து அங்கு போலீஸார் விரைந்துள்ளனர். அதிரடிப்படையினர் அதிரடியாக உள்ளே நுழைந்துள்ளனர். எம்.எல்.ஏக்கள் 3 மணிக்குள் வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் 8வது நாளாக கூவத்தூர் ரிசார்ட்டில் கடத்தி அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து மாறுவேடத்தில் தப்பி வந்த எம்எல்ஏ சரவணன் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். கூவத்தூர் ரிசார்ட்டில் விசாரணை நடத்திய போலீசாருடன் எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம் செய்தனர்.

மேலும் எம்.எல்.ஏ.க்கள் கடத்தல் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். எடப்பாடி பழனிச்சாமியை போலீஸ் கைது செய்யலாம் என்பதால் கூவத்தூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அதிரப்படையினரும் உள்ளே நுழைந்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. கூவத்தூர் ரிசார்ட்டை சுற்றிலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கூவத்தூர் ரிசார்ட்டுக்குள் அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications