அரசியல் சதியால் தான் பதவி இழக்க நேரிட்டது.. இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா உருக்கம்..
சென்னை: அரசியல் சதியால் தான் முதல் அமைச்சராக இல்லாத சூழல் ஏற்பட்டதாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதா, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திரண்டிருந்த மக்களிடையே பேசினார். தனது அரசு செயல்படுத்தியுள்ள மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி அவர் வாக்கு சேகரித்தார்.

அரசியல் சதியால் தான் தனது முதலமைச்சர் பதவி பறிபோனதை அவர் சுட்டிக் காட்டினார். இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதுதான் தனது லட்சியம் என்றும், அதற்கு வாக்காளர்கள் ஆதரவு தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்
அதிமுக செய்த மக்கள் நலத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்வதாக கூறிய அவர், தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மின் வெட்டே இல்லை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆர்.கே நகரில் 1500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாகவும் ஜெயலலிதா கூறினார்.

இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளதாகவும், சமூக பாதுகாப்பு திட்டத்திங்களின் கீழ் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நலன் பெற்றுள்ளதாகவும் ஜெயலலிதா கூறி வாக்கு சேகரித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications