பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகள் சார்பில் சிவகாசியில் நாளை கடையடைப்பு!
பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சிகளின் சார்பாக சிவகாசியில் நாளை கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.
சிவகாசி : சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக நாளை அனைத்து கட்சிகளின் சார்பாக கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனிடையே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதிக்குமோ என்கிற அச்சத்தால் விற்பனையாளர்கள் சிவகாசி பட்டாசு தயாரிப்பு ஆலைகளுக்கு ஆர்டர் கொடுக்காமல் உள்ளனர். ஆர்டர்களுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டால்தான் பட்டாசு உற்பத்தியே தொடங்கும்.
தற்போது விற்பனையாளர்கள் பட்டாசுகளை கொள்முதல் செய்வதில் தயக்கம் காட்டி வருவதால் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆலைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாக உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தத்தால் சுமார் எட்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனிடையே பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை மாவட்டம் முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நடத்த அனைத்து கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு மதிமுகவும் ஆதரவு தரும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications