அரசியல் ஒரு சாக்கடை- எந்த குப்பை விழுந்தா என்ன? - உதயநிதி குறித்த கேள்விக்கு மு.க. அழகிரி பதில்
அரசியல் ஒரு சாக்கடை என்றும் அதில் எந்த குப்பை விழுந்தாலும் கவலையில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: அரசியல் ஒரு சாக்கடை என்றும் அதில் எந்த குப்பை விழுந்தாலும் கவலையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட சிவகாசி அருகே உள்ளே தாயில்பட்டியில் நிகழ்ந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க. அழகிரி, பேட்டியளிக்க மறுத்து விட்டார்.

உதயநிதி ஸ்டாலின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், அரசியல் ஒரு சாக்கடை அதில எந்த குப்பை விழுந்தாலும் எனக்கென்ன என்று கேட்டார்.
மு.க அழகிரி கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த போது 2006 சட்டசபைத் தேர்தல், 2009 லோக்சபா தேர்தலில் திமுக வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் பாடுபட்டவர். மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். முதுமை காரணமாக கருணாநிதி கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக ஓய்வில் இருக்கிறார். கருணாநிதி அழைத்தால் திமுகவில் இணைவேன் என்று அழகிரி கூறி வந்தார்.
ஆர்.கே.இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் தனது டெபாசிட்டை பறிகொடுத்தார். இதற்கு மு.க அழகிரி, திமுக செயல்தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போதே கட்சி நிர்வாகிகள் பலரும் அழகிரி கருத்துக்கு பதிலடி கொடுத்தனர்.
ஸ்டாலின் மகன் உதயநிதி, அரசியலில் களமிறங்கப் போவதாக கூறி வருகிறார். திமுக நடத்தும் போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் உதயநிதியின் பெரியப்பாவும், ஸ்டாலின் அண்ணனுமான மு.க அழகிரி, குப்பை என்று வர்ணித்து உள்ளார்.
அழகிரி கருத்துக்கு எல்லாம் பதில் தர முடியாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் என்ன ரியாக்சன் தரப்போகிறாரோ?
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications