ஓவிய டீச்சர் வீட்டில் 75 சவரன் நகையும் 3 லட்சம் பணமும் கொள்ளை - வீடியோ
பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற ஓவிய டீச்சர் வீட்டில் 75 சவரன் நகையும் 3 லட்சம் பணமும் கொள்ளையடிக்கபப்ட்டுள்ளது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ராமானுஜர் சாலையில் ஓவிய ஆசிரியர் வீட்டில் 75 சவரன் நகையும் 3 லட்ச ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்.
பொள்ளாச்சி ராமனுஜர் சாலையில் வசித்து வந்தவர் நாகராஜன். இவர் ஒரு ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர். இவர் மரணமடைந்த பிறகு அவரது மனைவி பொற்கொடி அதேவீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பொற்கொடி உறவினர்கள் வீட்டுக்குச் சென்று நேற்று வீடு திரும்பியுள்ளார். அப்போது வீடு திறந்து காணப்பட்டது. உள்ளே சென்று பார்த்த பொது பீரோவில் இருந்த பொருட்களையெல்லாம் வெளியே எடுத்துப்போட்டுள்ளனர் கொள்ளையர்கள்.
பிறகு, பீரோவில் இருந்த 3 லட்சம் பணத்தையும் 75 சவரன் நகைகையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் பொற்கொடி.
அதன் பின்னர், அக்கம்பக்கத்தினர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக சொலை,கொள்ளை மிகவும் சாதரணமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்ப சூழ்நிலையும் இதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications