பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்த கட்சிகள் வேதனைப்படும்.. சாபம் விடும் பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: பாஜக கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகள், தேர்தலுக்குப்பின் வேதனைப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தக்கலையில் நேற்று செய்தியாளர்களிடம் இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழக அரசு அரசியல் நாடகம் நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சட்டப்படியான நடவடிக்கையைதான் மத்திய அரசு மேற்கொள்ளும்.

நேரத்திற்கு ஒருமுறை பெயரை மாற்றி கொண்டு இருக்கும் மக்கள் நலக் கூட்டணி ஒரு கூட்டணியே கிடையாது.
அந்த கூட்டணிக்கு கொள்கை எதுவும் கிடையாது. திமுகவும், பாமகவும் தேர்தல் அறிக்கை தொடர்பாக மாறி மாறி வேஷம் போட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
தமிழகத்தில் அதிமுக அரசு வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தமிழக அரசு, மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவித வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டுவரவில்லை.
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகள், தேர்தல் முடிவுக்குப்பின் மிகுந்த வேதனையை உணரும் சூழல் உருவாகும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாஜக கூட்டணியில் இருந்த மதிமுக, தேமுதிக, பாமக போன்றவை இப்போது அக்கட்சியுடன் கூட்டணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications