நீங்கள் தடுப்பூசி மையங்கள் அமைத்தால்.. இலவசமாக நான் வாகனம் தருகிறேன் -ஆட்சியரிடம் கூறிய பூங்கோதை..!
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி முழுவதும் கொரோனா தடுப்பூசி மையங்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துக் கொடுத்தால், மக்கள் எளிதாக வந்து செல்ல இலவசமாக வாகன வசதி செய்தி தருவதாக பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்துள்ளார்.
சுட்டெரித்த கோடை வெயிலில் கடந்த ஒரு மாதமாக அனல் பறக்க தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர்களில் பெரும்பாலானோர் தற்போது ஓய்விலிருக்க, ஒரு சிலர் மட்டும் எப்போதும் போல் தங்கள் களப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் திமுக மருத்துவ அணி நிர்வாகியும், ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூங்கோதை ஆலடி அருணா வாக்குப்பதிவு முடிந்து 5 நாட்கள் மட்டும் ஓய்வெடுத்துவிட்டு இப்போது வழக்கமான தனது தொகுதிப் பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியபடி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை தொடங்கிய பூங்கோதை, தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரானுக்கு கொரொனா தடுப்பு பணிகள் குறித்து கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.
அதில், தனது ஆலங்குளம் தொகுதி முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்க வேண்டும் என்றும் அவ்வாறு அமைத்தால் தனது தந்தை ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் மக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் இலவசமாக வாகன வசதி ஏற்படுத்தி தருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் மற்றும் ரெம் டெசிவர் உள்ளிட்ட மருந்துகளின் தற்போதைய கையிருப்பு பற்றியும் அறிந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
கொரோனாவின் தொடக்க காலமான கடந்தாண்டு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சூழலில், தமிழகம் முழுவதும் உள்ள திமுக மருத்துவ அணி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து தொலைபேசி வழி ஆலோசனைகளை பொதுமக்களுக்கு வழங்கும் பணியை முன்னெடுத்தவர் பூங்கோதை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!












Click it and Unblock the Notifications