நாங்களும் ஒட்டுவோம்ல: திருச்சியில் காங்கிரஸுக்கு போட்டியாக போஸ்டர் ஒட்டிய அதிமுகவினர்
திருச்சி: திருச்சியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்திற்காக அடிக்கப்பட்ட போஸ்டர்களுக்கு போட்டியாக அதிமுகவினரும் போஸ்டர்கள் அடித்து ஒட்டியிருந்தனர்.
திருச்சி நகரில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். ராகுல் பேசுகையில் காற்று சுழற்றி சுழற்றி அடித்ததுடன் மழையும் கொட்டித் தீர்த்தது. இருப்பினும் ராகுல் குடை கூட பிடிக்காமல் நனைந்தபடியே பேசினார்.

ராகுல் தனது உரையில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசை தாக்கிப் பேசினார். ராகுல் வருகையையொட்டி காங்கிரஸார் திருச்சி நகர் எங்கும் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். ராகுல் அதிமுக அரசை தாக்கிப் பேசுவார் என்பதை ஆளுங்கட்சியினர் எதிர்பார்த்திருப்பார்கள் போன்று.
அதிமுகவினர் காங்கிரஸாருக்கு போட்டியாக நகரின் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவை புகழ்ந்தும், குலசாமி என்றும் கூறி அச்சடிக்கப்பட்ட போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். காங்கிரஸாரின் போஸ்டர்களுக்கு அருகில் தான் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.
இந்த போஸ்டர் போட்டியால் திருச்சி நகரம் போஸ்டர் நகரமாக காணப்பட்டது. அதிமுக, காங்கிரஸ் கட்சியினரின் இந்த போஸ்டர் போரை பார்த்து போலீசார் தான் பதட்டம் அடைந்தனர்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications