பிரதீபாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு.. போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது
தற்கொலை செய்து கொண்ட பிரதீபாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

விழுப்புரம்: தற்கொலை செய்து கொண்ட பிரதீபாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தோல்வியுற்றதால் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா நேற்று இரவு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். கூலித் தொழிலாளியின் மகளான பிரதீபா 12-ம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றும் அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத சூழலால், இந்த ஆண்டு மீண்டும் நீட் எழுதிய பிரதீபா அதில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்து கொண்டார்.

உடல் ஒப்படைப்பு
இந்நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிரதீபாவின் உடலுக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. உடற்கூறாய்வு முடிந்த நிலையில் பிரதீபாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் நிபந்தனை
முன்னதாக பிரதீபாவின் குடும்பத்தினர் உடலை பெற 3 நிபந்தனைகளை விதித்திருந்தனர். அதாவது உயிரிழந்த பிரதீபாவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், மாணவி பிரதீபாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 3 நிபந்தனைகளை விதித்தனர்.

ஆட்சியர் பேச்சு
கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உடலை வாங்க முடியாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பிரதீபாவின் பெற்றோரிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் நிபந்தனைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார்.

பெற்றுக்கொண்ட பெற்றோர்
மேலும் அவர்களின் நிபந்தனைகளை கோரிக்கை மனுவாக ஆட்சியர் பெற்றுக்கொண்டார். கோரிக்கை மனுவை ஆட்சியர் பெற்றுக்கொண்டதை தொடர்ந்து பிரதீபாவின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரதீபாவின் உடல் அவரது சொந்த ஊரான பெருவளூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications