விருத்தாசலத்திலிருந்து சட்டசபைக்கு செல்லும் பிரேமலதா? தேமுதிகவினருக்கு அண்ணியார் கொடுக்கும் பரிசு!
விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியில் நல்லூர் ஒன்றியத்தில் எந்த பூத்தில் அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அவர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் ஒரு பரிசு பொருளை அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக 10 சீட்களில் போட்டியிடுகிறது. மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் பெற்றுள்ளது. தேமுதிகவின் 21 ஆண்டு கால வரலாற்றில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது இதுவே முதல் முறை!

2014 ஆம் ஆண்டுக்கு முதல் தேமுதிகவுக்கு சரிவே ஏற்பட்டு வந்த நிலையில் கட்சியின் முக்கிய தலைவர்கள் வெளியேறி மாற்றுக் கட்சிகளில் ஐக்கியமாகிவிட்டனர். இனி அரசியல் எதிர்காலமே தேமுதிகவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையிலும் விஜயகாந்த் காலத்தில் இருந்து பயணித்து வருவோருக்கு பிரேமலதா சீட் கொடுத்துள்ளார். இந்த நிலையில் விருத்தாசலத்தில் பிரேமலதாவும், விருதுநகரில் விஜய பிரபாகரனும் போட்டியிடுகிறார்கள்.
இருவரும் தாங்கல் போட்டியிடும் தொகுதிகளிலும் தேமுதிகவினர் போட்டியிடும் தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அது போல் பிரேமலதா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் விருத்தாசலம் தொகுதியில் கட்சியினருடன் பிரேமலதா ஆலோசனை நடத்தினார். அப்போது சேகர் என்ற நிர்வாகி பேசுகையில், "நல்லூர் ஒன்றியத்தில் 70 பூத்கள் உள்ளன. அதில் எந்த பூத்தில் அதிக வாக்குகளை பெற்று தருகிறார்களோ, அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய், அண்ணியார் கைகளால் வழங்கப்படும்" என அறிவித்தார்.
இதை கேட்டு சிரித்த பிரேமலதா, சேகர் கையால் யார் ஒரு லட்சம் ரூபாய் வாங்க தயாராக இருக்கிறார்கள், ரெடியா என கேட்டார். அதற்கு தேமுதிகவினரும் மகிழ்ச்சியாக ரெடி என பதில் அளித்தனர். மேலும் பிரேமலதா கூறுகையில், அண்ணி கிட்ட வேறு வேறு கிப்ட் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.
என்னை பொருத்தவரை கேப்டனுக்காக பாடுபடுவோருக்கு செயலில் காட்ட விரும்புகிறேன். எனது சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும். இனி இந்த தொகுதி மக்களுடன்தான் நான் இருக்க போகிறேன். வீடு பார்க்க சொல்லிவிட்டேன்.
சென்னையில் வேலை இருக்கும் போது அங்கு செல்வேன். இங்கு வேலை இருக்கும் போது வருவேன். விருத்தாசலம் வந்தால் என்னவெல்லாம் வேலை இருக்கிறது என்று பார்த்து, இரண்டு, மூன்று நாட்கள் தங்கி முழுவதுமாக முடித்து விட்டு தான் சென்னை புறப்படுவேன். இவ்வாறு பிரேமலதா தெரிவித்துள்ளார்.
பிரேமலதாவை எதிர்த்து பாமக சார்பில் தமிழரசி போட்டியிடுகிறார். இங்கு அதிமுக சார்பில் வலுவான வேட்பாளர் யாரும் களமிறங்காததால் பிரேமலதாவின் வெற்றி கிட்டதட்ட உறுதி என்கிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications