இருட்டுக்கடை எனக்கே சொந்தம்.. நானே வாரிசு.. மீண்டும் பொது அறிவிப்பை வெளியிட்ட பிரேம் ஆனந்த் சிங்
நெல்லை: பிரேம் ஆனந்த் சிங் இருட்டுக் கடை அல்வா கடை தனக்குத்தான் சொந்தம் என பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நெல்லை இருட்டுக்கடை விவகாரம் குறித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள பொது அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லையில் உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதை கவிதா சிங் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிதா சிங்கின் மகள் கனிஷ்காவிற்கும் கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

கனிஷ்கா பல்ராம் சிங் தரப்பினர் தன்னுடைய சொத்துகளை தங்கள் பெயருக்கு மாற்றம் செய்து தரக்கோரி தொந்தரவு செய்ததாக நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திடீரென கவிதா சிங்கின் சகோதரர் நயன்சிங், இருட்டுக்கடைக்கு தான்தான் உரிமையாளர் தன்னிடம் அதற்கான உயில் இருக்கிறது என்றும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதற்கு பதில் அளித்து கவிதா சிங் இருட்டுக்கடையை தன்னிடம் இருந்து நயன்சிங் அபகரிக்க முயற்சி செய்கிறார் என பொது அறிவிப்பை வெளியிட்டார்.
இது ஒருபுறம் இருக்க இவர்கள் இருவருக்கும் போட்டியாக சென்னையைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் சிங் என்பவர் இருட்டுக்கடை தனக்குத் தான் சொந்தம் என புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். கிருஷ்ண சிங்கின் அண்ணனான உதய சிங்கினுடைய பேரன் பிரேமானந்த சிங் இருட்டுக் கடை தனக்குத்தான் சொந்தம் எனக் கூறினார். இந்த விவகாரம் சில நாட்கள் மௌனமாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் பிரேம் ஆனந்த் சிங் இரண்டாவது முறையாக திடீர் அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் சிங் வெளியிட்ட பொது அறிவிப்பில், நெல்லை இருட்டுக்கடை மற்றும் பிற சொத்துக்கள் தனக்கு சுலோச்சனா பாயிடமிருந்து கிடைக்கப்பெற்றது என்றும், வழக்கு விவரங்களை மறைத்து பொது அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது என கவிதாவும், முழு விசாரணைக்கு பின்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் இருட்டு கிடைக்கும் பிரேம் ஆனந்த் சிங்கிற்கும் இருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நயன்சிங் பொது அறிவிப்பு மற்றும் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
இந்த இரு நபர்களுக்கும் இருட்டுக்கடை மற்றும் அதன் சொத்துக்களை அபகரிக்க வேண்டி தங்களுக்குள் மோதி வருகின்றனர் மேலும் சட்டவிரோத ஆவணங்கள் மூலம் சொத்து அபகரிப்பு செய்வதற்கும் முயற்சிக்கிறார்கள். அவர்கள் குறிப்பிட்டுள்ள வழக்கு பரிகாரங்களும் அதன் முடிவுகளும் தற்போது இருட்டுக்கடை மற்றும் அது தொடர்பான சொத்துக்களின் வாரிசு உரிமை தொடர்பானது இல்லை. கவிதா சமீப காலமாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ள தகவல்களின்படி பார்த்தால் மிகப்பெரிய சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் செய்துள்ள விவரங்கள் தெரிய வருகிறது.
இருட்டுக்கடை சொத்துக்களின் அவசரகதியிலான சட்டவிரோத உரிமை மாற்றம் மற்றும் மிகப்பெரிய சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக தெரிகிறது. ஹரிசி மற்றும் சுலோச்சனா பாய் மற்றும் பிஜிலி சிங் அவர் மனைவி சுலோச்சனா பாய் காலமாகிவிட்ட நிலையில் தற்போது அவர்களுக்கு இந்து வாரிசுரிமை சட்டப்படி பிரேம் ஆனந்த் சிங் மட்டுமே வாரிசாக ஆவார். அவருக்கு மட்டுமே இருட்டுக்கடையும் அதன் சொத்துக்களும் சட்டப்படி சேரத்தக்கது. கவிதா மற்றும் நயன்சிங் ஆகிய இருவரின் மீதும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
கவிதா மற்றும் நயன்சிங் ஆகிய இருவரிடமும் இருட்டுக்கடை தொடர்பாகவும் கூட்டுக் குடும்ப சொத்துக்கள் தொடர்பாகவும் யாரும் எவ்விதத்திலும் தொடர்பு கொள்ள வேண்டாம் என இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கவிதா சிங் அவரது சகோதரர் நயன் சிங் மாறி மாறி பொது அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக பிரேம் ஆனந்த் தான் தான் இருட்டுக்கடைக்கு வாரிசு என மீண்டும் பொது அறிவிப்பை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications