மாணவர் சங்கத் தேர்தலை நடத்தக் கோரி பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் போராட்டம்... போலீஸ் தடியடி
சென்னை: கல்லூரியில் மாணவர் சங்க தலைவர், உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்தக் கோரி சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ளது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிரெசிடென்சி காலேஜ் என்னும் மாநிலக் கல்லூரி. இக்கல்லூரியில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களிலேயே கல்லூரி மாணவர்கள் தேர்தல் நடைபெற்று முடிந்துவிடும்.

இந்நிலையில் மாணவர்களுக்கிடையேயான தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வருடம் அக்டோபர் மாதம் ஆகியும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனையடுத்து கல்லூரி மாணவர் தேர்தலை நடத்தியே தீர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மாணவர்கள் இன்று காமராஜர் சாலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் புரட்சிகர மாணவர் முன்னணி அமைப்பும், அதனைச் சார்ந்த மாணவர்களும் மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக கலந்து கொண்டனர். கடற்கரைச் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைந்து செல்லக் கோரிய போலீசார், அவர்கள் மீது தடியடி தாக்குதலை நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்கள் மீது வன்முறை பிரயோகம் செய்ததாக போலீசார் மீது குற்றச்சாட்டினைத் தெரிவித்துள்ளனர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications