கறுப்பு கொடியை பார்க்க தைரியமில்லாத கோழை மோடி - வைகோ கடும் தாக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மோடியைத் தாக்கும் வைகோ-வீடியோ

  தேனி: பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோழை என்றும் ஒரு பயந்தாங்கொள்ளி என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார். தமிழகத்தில் சாலையில் பயணிக்கும் நெஞ்சுரம் மோடிக்கு இல்லை என்றும் வைகோ கிண்டலடித்துள்ளார்.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், பிரதமர் மோடியைக் கண்டித்தும் நாளை அனைத்து வீடுகளிலும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என்றும் மோடிக்கு கறுப்பு கொடி காட்டுவோம் என்றும் மு.க ஸ்டாலின் கூறியிருந்தார்.

  மோடி வரும் நாளை துக்க தினமாக அனுசரிக்க வேண்டும் என்றும் அனைவரும் கறுப்பு உடை அணியவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மோடியின் பயணத்திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  சாலையில் போகாதது ஏன்?

  சாலையில் போகாதது ஏன்?

  சென்னை சாலைகளில் அதிக தூரம் பயணிக்காமல் ஹெலிகாப்டரில் பயணம் செய்கிறார் மோடி. இந்த நிலையில் தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வீராதி வீரர், தீரர் மோடி தமிழக சாலைகளில் பயணிக்க தைரியம் இல்லாதவர் என்றார்.

  பயந்தாங்கொள்ளி

  பயந்தாங்கொள்ளி

  சாலையில் போகாமல் மகாபலிபுரத்திற்கும் ஐஐடிக்கும் ஹெலிகாப்டரில் போகிறார். உங்களை மாதிரி
  பயந்தாங்கொள்ளி பிரதமரை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை.

  கருப்பு கொடிக்கு பயப்படலாமா

  கருப்பு கொடிக்கு பயப்படலாமா


  வீராதி வீரர் என்று சொல்லும் நீங்க ஒரு கோழை. கறுப்பு கொடியை சந்திக்க நெஞ்சுரமும், தைரியமும் இல்லாதவர்.
  நாங்க என்ன கறுப்பு கொடியை வச்சு சுடவா போறோம். கறுப்புக் கொடிக்கே பயப்படலாமா.

  ரோட்ல வாங்க

  ரோட்ல வாங்க

  முசோலினியாக மாறிய மோடி அவரைப் போல தைரியம் இல்லையே. தைரியம் இருந்தா ரோட்ல வாங்க. நெஞ்சுரம் இருக்கிற தைரியமான பிரதமராக இருந்தா சாலையில் வரலாமே. நாளைக்கு பார்க்கலாம் என்று வைகோ கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  MDMO general secretary Vaiko strongly condemned Prime Minister Narendra Modi as a coward and a fearful one. Vaiko is keen that Modi does not have the hard way to travel on the road in Tamil Nadu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற