திடீர் மரணமடைந்த விசாரணைக் கைதி.. அவசரம் அவசரமாக உடலை எரித்த போலீஸ்
தருமபுரி: தருமபுரியில் விசாரணைக் கைதி ஒருவர் திடீரென்று இறந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போலீசார் அவருடைய உடலுக்கு அவசரமாக எரியூட்டியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்த கவலக்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். கூலித்தொழிலாளி ஆன இவரை நேற்று போலீஸார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

விசாரணை முடிந்து சந்திரன் தருமபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிளை சிறையில் உள்ள சந்திரனை பார்க்க அவரது மனைவி லட்சுமி வந்துள்ளார். அப்போது உனது கணவர் இறந்து விட்டதாகவும், உடல் மருத்துவமனையில் உள்ளதாக சிறை காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சிக்குள்ளான லட்சுமி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். உடலை மாலை 6 மணிக்கு தருமபுரி மின்மயானத்திற்கு போலீஸார் சந்திரனின் உடலை எடுத்து வந்தனர். எரியூட்ட எதிர்ப்பு தெரிவித்த அவரது உறவினர்களை கண்டு கொள்ளாத போலீஸார் அவசர, அவசரமாக சந்திரனின் உடலை வந்து எரியூட்டினர்.
சந்திரனின் உடலை பார்த்து கதறிய அவரது இரண்டு குழந்தைகள் மதன், யுவராஜ் "அப்பா எப்ப வருவார் அப்பா எப்ப வருவார்" என அனைவரையும் கேட்டது பார்த்தவர்களை மனம் கலங்க வைத்தது.
எதற்காக சந்திரனை போலீஸார் விசாரணைக்கு அழைத்து வந்தனர். ஏன் அவரது மனைவியிடம் தெரிவிக்கவில்லை. காரணமில்லாமல் கிளை சிறையில் அடைத்தது எதற்கு, எப்படி இறந்தார். அவசர அவசரமாக மின் மயானத்தில் அவரது உடலை போலீஸார் எரியூட்ட என்ன காரணம் என உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications