சேலம் சிறையில் பரோல் கேட்டு திடீர் உண்ணாவிரதத்தில் குதித்த ஆயுள் தண்டனைக் கைதி!
சேலம் சிறையில் ஆயுள் தண்டனை கைதி பரோல் கேட்டு உண்ணாவிரதத்தில் குதித்தார்.
சேலம் : ஆயுள் தண்டனை கைதி பரோல் கேட்டு சேலம் சிறையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அய்யந்திருமாளிகை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் வயது 45. இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதி ஆவார். தனக்கு பரோல் வேண்டும் என கேட்டு சிறை அதிகாரிகளிடம் இவர் பலமுறை மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் முத்துக்குமாரின் நன்னடத்தை சரியில்லை என அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்தன. அதுமட்டுமல்லாமல், அவருக்கு பரோல் வழங்கினால் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திலிருந்து தப்பி ஓடிவிடுவார் என கைதிகள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் முத்துக்குமாருக்கு பரோல் வழங்க சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் முத்துக்குமாருக்கு பிறகு பரோல் கேட்டவர்களுக்கு அதிகாரிகள் பரோல் வழங்கியுள்ளனர்.
இதனால் சிறை அதிகாரிகளிடம் சென்ற முத்துக்குமார், எனக்கு பின்னால் கொடுத்தவர்களுக்கு மனு கொடுத்தவர்களுக்கு மட்டும் பரோல் வழங்கியுள்ளீர்கள், நான் பலமுறை தாக்கல் செய்தும் எனக்கு ஏன் பரோல் தர மறுக்கிறீர்கள் என கேட்டார்.
அதிகாரிகளும், முத்துக்குமாருக்கு பரோல் தர முடியாத காரணத்தை விளக்கினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த முத்துக்குமார், நான்தான் முதலில் மனு கொடுத்தேன், எனக்குதான் முன்னுரிமை அடிப்படையில் பரோல் வழங்க வேண்டும் எனக்கூறி அதிகாரிகளை கண்டித்து திடீர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
தகவலறிந்த சிறை அதிகாரிகள் உடனடியாக விரைந்து சென்று முத்துக்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்,. இது குறித்து தகவல் அறிந்த ஜெயில் அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கைதியின் இந்த திடீர் உண்ணவிரதம் சேலம் சிறைவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications