பேரறிவாளனை தாக்கிய கைதி வேறு சிறைக்கு மாற்றம் !
Subscribe to Oneindia Tamil
வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை தாக்கிய சக கைதி ராஜேஷ் கண்ணா வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் உள்ளார். இவரை திடீரென்று சக கைதியான ராஜேஷ் கண்ணா நேற்று இரும்பு கம்பியால் தாக்கினார்.

இதனால் பேரறிவாளனுக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு தையல் போட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ராஜேஷ் கண்ணா ஏன் பேரறிவாளனை தாக்கினார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பேரறிவாளன் உள்ள உயர் பாதுகாப்பு பிரிவில் இருந்து ராஜேஷ் கண்ணா பொது சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications